Find missing family - Tamil
காணாமற் போன குடும்பத்தினரைத் தேடிக் காணுங்கள்
நீங்கள் போரினால் ,இயற்கை அனர்த்தத்தினால் அல்லது குடிபெயர்வினால் பிரிந்திருந்தால் ,காணாமற் போன உறவினர்களை எமது சர்வதேச குடும்பத் தடமறிதற் சேவையினூடாகத் தேடிக் காண உதவி பெறுங்கள்.
நாங்கள் எவ்வாறு உதவலாம்
நாம் உங்களுக்கு உதவக் கூடியன:
- உங்களது காணாமற் போன குடும்பத்தினரைத் தேடிக் காணல்
- உங்களது குடும்பத்தினருக்கு தகவல் அனுப்புதல் (ஆனால் பணத்தையோ, பொதிகளையோ அல்ல)
தடுத்து வைப்புச் சான்றிதழொன்றைப் பெறுதல் (சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால்[ICRC] சந்திக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டோரெனப் பதிவு செய்தோருக்கு).
இது குடும்பங்கள் மீள இணைய உதவுவதற்கான ஓர் இலவச ,இரகசியங் காக்கும் மனிதாபிமானச் சேவையாகும். நாம் உங்களது அனுமதியின்றி வேறெவருக்கும் உங்களது தகவல்களைக் கொடுக்க மாட்டோம்.
நாங்கள் யாருக்கு உதவலாம்
நீங்களாகவே உங்களது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள இயலாமற் போயிருப்பதுடன் பின்வரும் இரண்டும் பொருந்துமாயின் நீங்கள் எமது குடும்பத் தடமறிதற் சேவையைப் பயன்படுத்தலாம்:
- நீங்கள் ஐக்கிய இராச்சியத்தில் இருக்கிறீர்கள்நீ
- ங்கள் போரினால் ,இயற்கை அனர்த்தத்தினால் அல்லது குடிபெயர்வினால் பிரிந்திருக்கிறீர்கள்.
நீங்கள் வெளிநாட்டிலுள்ள ஒரு முதிய உறவினருடனான தொடர்பை திடீரென இழந்து விட்டீர்கள் என்பது போன்ற ஒரு மனிதாபிமானத் தேவை இருக்கும் ஏனைய சூழ்நிலைகளில் நாம் உதவக் கூடியதாக இருக்கும்.
எவ்வாறு உதவி பெறுவது
உங்களது ஆக அண்மையிலுள்ள குடும்பத் தடமறிதற் சேவையைக் கண்டு கொள்ளுங்கள்
நீங்கள் ஒரு முன்பதிவைச் செய்வதற்கு உங்களது ஆக அண்மையிலுள்ள குடும்பத் தடமறிதற் சேவையைத் தொடர்பு கொள்ளலாம்.
நேரமொதுக்குதலின் போது நாம் உங்களது உறவினரைப் பற்றியும் அவர் எங்கிருக்கக்கூடுமென நீங்கள் கருதுகிறீர்கள் என்பதைப் பற்றியும் கேள்வி கேட்பதுடன் நாம் ஒரு படிவத்தை நிரப்ப உங்களுக்கு உதவுவோம் .உங்களால் ஆங்கிலம் பேச முடியாவிடின் நாம் உங்களது முன்பதிவுக்காக ஓர் உரைபெயர்ப்பாளரை வழங்கலாம்.
நாம் உங்களது உறவினரைத் தேடிக் காண வாக்குறுதியளிக்க முடியாது, ஆயினும் நாம் அந்நாட்டிலுள்ள எமது சகாக்களைத் தொடர்பு கொண்டு, நாம் ஏதேனும் செய்தியைப் பெறும் விரைவில் உங்களுக்கு அறியப் பண்ணுவோம்.
அத்துடன் நீங்கள் எமது முகத் தடமறிதல் வலைத்தளத்தில் உங்களது குடும்பத்தினர் உங்களைத் தேடுகிறார்களா என்பதைச் சோதிக்கவும் உங்களது ஒளிப்படத்தைச் சேர்க்கவும் முடியும்.
நீங்கள் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்காவிடின்
நீங்கள் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்காத காரணத்தால் உங்களால் எமது சேவையைப் பயன்படுத்த இயலாவிடின் ,நீங்கள் உங்களது நாட்டிலுள்ள செஞ்சிலுவை அல்லது செம்பிறைச் சங்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் போரினால் ,அனர்த்தத்தினால் அல்லது குடிபெயர்வினால் பிரியவில்லையெனின்
நாம் உங்களுக்கு உதவ முடியாவிடின், உங்களுக்கு உதவக் கூடிய ஏனைய நிறுவனங்கள் இருக்கின்றன.
நீங்கள் முன்னர் இச்சேவையைப் பயன்படுத்தியுள்ளீர்களா? [எமக்கு உங்களது பின்னூட்டத்தை வழங்குங்கள்] (feedback form).
Do you have a question about this page or want to give us feedback? Visit our Contact us page.